Friday, October 14, 2011

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு (எஃப்.ஐ.ஆர்.) செய்யப்படுமென்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ புதன்கிழமை தெரிவித்துள்ளது.

÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.

÷ மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, "ஏர்செல்' நிறுவனத்துக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டார் என்பது உள்பட அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் சிபிஐ வசம் உள்ளதாகத் தெரிகிறது.

÷2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பான புதிய விசாரணை நிலை அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்விடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

÷சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் அப்போது கூறியது: இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்பு குறித்த முதல்நிலை விசாரணை முடிந்து விட்டது. அடுத்த சில நாள்களில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.

÷இதே வழக்கில் "எஸ்ஸôர்' நிறுவனத்தின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது முடிய இன்னும் 2 வார காலம் ஆகும். வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றார்.

÷"ஏர்செல்' நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான சிவசங்கரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், நியாயமற்ற வகையில் பாரபட்சமாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.

÷நெருக்குதல் காரணமாக மலேசியாவின் "மேக்ஸிஸ்' நிறுவனத்துக்கு "ஏர்செல்' விற்கப்பட்டுள்ளது. இதில் ரூ.549 கோடி கைமாறியுள்ளது என்று கூறினார். ஆனால் இது தொடர்பான முழு விவரங்களை வேணுகோபால் கூறவில்லை.

÷"மேக்ஸிஸ்' நிறுவனம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் குழுமத்தில் முதலீடு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏர்செல் - மேக்ஸிஸ் விவகாரத்தில் தயாநிதியின் பங்கு குறித்து அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் சுனிதா ரெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டது என்றும் வழக்குரைஞர் வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய பிற நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதால் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

÷முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் முறையாக மத்தியில் 2004-ல் ஆட்சி அமைத்தபோது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்தார்.

2007 வரை அவர் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு நெருக்குதல் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இப்புகாரை அடுத்து "ஏர்செல்' நிறுவனர் சிவசங்கரனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது.

அதில் தயாநிதி மாறன் தமக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு தராமல் சுமார் இரண்டு ஆண்டு காலம் இழுத்தடித்தார் என்றும், அதன் காரணமாக "ஏர்செல்' நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த "மேக்ஸிஸ்' நிறுவனத்திடம் விற்க வேண்டியதாயிற்று என்றும் சிவசங்கரன் கூறியிருந்தார்.

மலேசிய நிறுவனத்தின் கைக்கு "ஏர்செல்' மாறிய 30-வது நாளில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன் பின், சன் குழுமத்தின் சன் டி.டி.எச். நிறுவனத்தில், மேக்ஸிஸ் துணை நிறுவனமான அஸ்ட்ரோ ரூ. 600 கோடியை முதலீடு செய்திருந்தது.

÷இதையடுத்து 2ஜி ஊழலில் தயாநிதிக்கும் தொடர்பு உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறியது. இதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் கடந்த ஜூலை 7-ம் தேதி பதவி விலகினார்.

Wednesday, October 12, 2011

                            உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வரும் தொண்டர்களுக்கு வழங்க மதுவை பெட்டி பெட்டியாக பதுக்கி வைப்பதால் டாஸ்மாக் கடைகளில் போதுமான சரக்கு கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடுகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்பட முக்கிய கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுடன் பிரசாரத்துக்கு வருவோருக்கு தினக்கூலி, 3 வேளை உணவு, மது போன்றவற்றை அளித்து குஷிப்படுத்தி வருகின்றனர். இதற்காக டாஸ்மாக் கடைகளில்  மொத்தமாக பெட்டி, பெட்டியாக மது பாட்டில்களை வாங்கி அரசியல் கட்சியினர் பண்ணை வீடுகள், தோட்டங்களில் பதுக்கி வைத்து விடுகின்றனர்.

இதனால், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து இப்பகுதியில் உள்ள ‘ரெகுலர்‘ குடிமகன்களுக்கு விரும்பிய சரக்குகள் கடைகளில் கிடைப்பதில்லை. இதனால் குடிமகன்கள் சிலர் டாஸ்மாக் ஊழியர்களிடம் சண்டையிடுகின்றனர்.

Sunday, January 23, 2011

வாங்க உங்க குறைகளை சொல்லுங்க,,

இது உங்கள் நலனுக்காக உருவான வலைப்பூ.
இதில் நீங்கள் உங்கள் குறைகளைக்கூறலாம்.
உங்கள் நல்வாழ்வை சீர்குலைக்கும் சக்திகளைப்
பற்றி இமெயில் மூலம் எங்களைத்தொடர்பு
கொண்டால்  நாங்கள் அதில் உங்கள் நலனுக்கு
கேடுவிளைவிக்கும் நபர்களை அரசு அலுவலர்கள்
காவல் துறையினர்மூலம் தலையிட்டு சுமுகமாக தீர்த்து
வைப்போம்,
        பிற ,பின் வரும் காலங்களில்