Thursday, March 28, 2013

Fkhp thhpA+Hmyk;, ghyhW Xil rh];jh Nfhtpy; gq;Fdp cj;jpu tpoh














ஸ்டெர்லைட் போரட்டத்தை முறியடிக்க போலீஸ் முயற்சி: நேரடி ஒளிபரப்பிற்கு தடை ‍- பரபரப்பு!!



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆலையைக் கண்டித்து நடைபெறும் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராஜாஜி பூங்கா முன்பு திரண்டனர்.

ராஜாஜி பூங்காவிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை நோக்கி பேரணி செல்வதற்காக வணிகர்க்ள, மீனவ அமைப்பினர், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு தரப்பைப் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ராஜாஜி பூங்கா முன்பு குவிந்துள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் வந்துள்ளனர். 

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய அட்டைகளை தங்கள் கைகளில் ஏந்தியவாறு கோஷமிட்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் போராட்டம் துவங்குவதற்கு முன்னரே, மக்களை கைது செய்ய தயாராகினர். பேராட்டக்காரர்களை கைது செய்யதற்காக சுமார் 10க்கும் மேற்பட்ட பேருந்துகளை அங்கு நிறுத்தப்பட்டது. 

இதனால், மக்கள் ஆவேசம் அடைந்தனர். ஸ்டெர்லைட் ஆதரவு போலீசார்களே உடனே திரும்பிப்போ, பேருந்தை அப்புறப்படுத்தப்படாவிட்டால் பஸ்கள் நொறுக்கப்பட்டும் என்று போலீசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேருந்துகள் அனைத்தும் தென்பாகம் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. 


புதிய தலைமுறைக்கு தடை? பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த போராட்டத்தினை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக புதிய தலைமுறை, சன் தொலைக்காட்சி  சேனல்களைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து வ்ந்திருந்தனர். அப்போது போராட்டத்தினை நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், பத்திரிக்கையாளர்களை தரைக்குறைவாக பேசி வயர்களை பிடுங்கி எரிந்து தடை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பத்திரிக்கையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி ஏ.எஸ்.பி. மகேஷ் பத்திரிக்கையாளர்களுடன் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவும் காவல்துறையை கண்டித்தார்.

Monday, March 18, 2013


நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த 
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் ....

ஈழத்தமிழர்களை பாதுகாப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று முள்ளிவாய்க்கலில் படுகொலை நாடகத்தை, பாரத பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரசு கட்சித்தலைவர் அன்னை சோனியா காந்தி துணையுடன் அரங்கேற்றினார்.
 முள்ளிவாய்க்கால் நாடகத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி, சுப.வீரப்பாண்டியன் உள்ளிட்ட நடித்த காட்சிகளை பார்க்கும் போது... நெஞ்சு பொறுக்குதில்லையே...
 முள்ளிவாய்க்கால் படுகொலையை தொடர்ந்து, 2010ம் ஆண்டு ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியா வந்தார். இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
 சிவப்பு கம்பள வரவேற்புக்கு, பிறகு நடந்த இரவு நேர விருந்தின் மது அருந்தும் காட்சிகளின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளோம்.
 அதே போல், ராஜபக்சே மகன்கள் நாமல், யசந்தா..பெண்களுடன் அடிக்கும் கூத்த்தின் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளோம்..
 இந்த புகைப்படம் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைவரும் பார்த்து ரசித்த படமாகதான் இருக்கும்...
 இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு தமிழ்நாட்டு மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்... என்று பார்ப்போம்...
 தமிழக மக்களுக்கு சூடு சொரணை இருக்கிறதா?