Tuesday, May 14, 2013

தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி பிரஸ் மீடியா அசோஷியேசன் நெஞ்சார்ந்த நன்றிகள்


பத்திரிகையாளர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்திய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி பிரஸ் மீடியா அசோஷியேசன் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது. 


இது குறித்து, தூத்துக்குடி பிரஸ் மீடியா அசோஷியேசன் தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் : மக்களுக்காக  செய்திகளை வழங்கிடும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ள உழைக்கும் பத்திரிகையாளர்களுக்காக மருத்துவ காப்பீட்டு திட்டம், பத்திரிகையாளர் குடியிருப்பு திட்டம், ஒய்வூதியத்தை உயர்த்தி தருவது, ஒய்வூதியம் பெறுவதற்கான விதிகளை எளிமை படுத்துவது  என்று பல்வேறு கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் வைத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (14-05-2013) தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர், "பத்திரிகையாளர் மாதாந்திர ஓய்வூதியத்தை 6,000 ரூபாயிலிருந்து  7,500 ரூபாயாக  உயர்த்தியும், பத்திரிகையாளர் மனைவிக்கு  வழங்கப்படும்  குடும்ப மாதாந்திர ஓய்வூதியத்தை 3,000 ரூபாயிலிருந்து  4,500 ரூபாயாக உயர்த்தியும்  வழங்கப்படும்" என்ற நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பினால் மூத்த பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளர் குடும்பங்களும் நிச்சயம் பயனடைவர்.

மாண்புமிகு முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தூத்துக்குடி பிரஸ் மீடியா அசோஷியேசன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.