Tuesday, March 10, 2015

தூத்துகுடியில் காமராஜ் அகாடமி துவக்கவிழா

 


 




தூத்துக்குடி பக்கிள்புரம் ஜனதா பள்ளியில் காமராஜ் அகாடமியை தமிழக மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத்தலைவர் வக்கீல்.சொக்கலிங்கம் தொடங்கிவைத்தார்.



மதசார்பற்ற ஜனதா தள மாநகர செயலாளர் கோமதி நாயகம் வரவேற்றார். அரசு வேலைக்கான பயிற்சி மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் எழிலன், ரகு,ராஜதுரை, சரவணன், ராமநாதன், பேராசிரியை வாசுகி ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி வகுப்ப்புகள் எடுத்தனர். இந்த அகடமியின் இயக்குநர் புவனேஸ்வரி வெங்கட் நன்றி கூறினார். 



நிகழ்ச்சியில் ஜனதா தள நிர்வாகிகள் வேல்முருகன்,சாஸ்தாவூ, ராஜேந்திரன் மற்றும் மாணவ,மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். 

Monday, March 9, 2015

இளம்பெண்ணை ஏமாற்றிய காவல் நிலைய எழுத்தர்.

 

தல் திருமணத்தினை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி, 2வது திருமணம் செய்த காவல் நிலைய எழுத்தர் மீது நடவடி்ககை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.



தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வள்ளிவிளை கிராமம், வாரியார் தெருவைச் சேர்ந்தர் பமீலா. இவர் தனது கைக்குழந்தையுடன் வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: எனது கனவர் இன்பராஜ், சூரங்குடி காவல் நிலையத்தில் நிலைய எழுத்தராக உள்ளார். அவர் முதல் திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறி என்னை 2வதாக திருமணம் செய்து கொண்டார். 



கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.  தனக்கு நெல்லைக்கு இடமாற்றம் கிடைத்துவிடும், அங்கு புதுவீடு பார்த்து குடித்தனம் நடத்தலாம் என்று கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் என்னை ஏமாற்றி வந்தார். இந்நிலையில், அவர் ஏற்கனவே திருமணம் செய்த பொன் சரண்யாவுடன் ஸ்ரீவைகுண்டத்தில் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. 



விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, அவர் என்னை ஏமாற்றி, எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திலும், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியி்டம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிததுள்ளார். 

Sunday, March 8, 2015

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம்



ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சகி மகளிர் மேம்பாட்டுத்திட்ட சுய உதவிக்குழு மகளிரும், ஸ்டெர்லைட் மகளிர் ஊழியர்கள் குழுவான டியு- பெமினா விப்ஜியார் 2015 இணைந்து உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்டெர்லைட் முதனமை செயல் அலுவலர் ராம்நாத் முன்னிலை வகித்தார். கவிஞர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில், வழக்கறிஞர் சொர்ணலதா, வேதாந்தா குழும தகவல் தொடர்பு மற்றும் சமுதாய வளர்ச்சி துறை தலைவர் ரோமா பல்வானி வாழ்த்துரை வழங்கினர். ஸ்டெர்லைட் மனித வளர்ச்சி துறை தலைவர் சுரேஷ் போஸ், சமூக தொடர்புத்துறை ரமேஷ், துளசி சமூக அறக்கட்டளை தலைவர் தனலெட்சுமி, தாயகம் ஜெயகனி, ஏபிஎஸ். பவுண்டேசன் டென்சி, பெல் கல்விக்கழகம் பியூலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகளிர்தின விழாவில், 8சுய உதவிக்குழுவினருக்கும், 8மகளிர் தொழில் முனைவோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற 120 மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுவைச் சேர்ந்த மகளிர்கள் கலந்து கொண்டனர். மேலும், விழா வளாகத்தில் வளரிளம் பெண்களும், தாய்மார்களும் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் இலவச மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் ஏராளமானோர் பயன்பெற்றனர்.


ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் மகளிர் மேம்பாட்டு திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அப்பகுதி பெண்களின் சமூக பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு தொழிற்பயிற்சியும் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1400 குழுக்கள் அமைக்கப்பட்டு 19ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக மாறியது மட்டுமின்றி, தொழில் முனைவோர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று விழாவில் ஸ்டெர்லைட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.