Tuesday, December 20, 2016

வடக்கு தாமரைக்குளம் அருள மாடசுவாமி கோவிலில் அஷ்ட பந்தன நபிகிரணம் பிரதிஷ்டை
























































































கன்னியாகுமாி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் அருள்மிகு அருள மாடசுவாமி அஷ்ட பந்தன நபிகிரணம் பிரதிஷ்டை   நடந்தது.

கன்னியாகுமாி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் பகுதி காவல் தெய்வமான அருள மாடசுவாமி கோவிலில் அஷ்ட பந்தன நபிகிரணம் பிரதிஷ்டை நடைபெற்றது.முதலில் கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து மர்திந்திய ஹோமும் நவக்கிர ஹோமம் துர்கா ஹோமம் விக்ரக சதுர்த்தி நடைபெற்றது.

மாலை 5.30 மணியளவில் சுதர்சன ஹோமம் அக்கோர ஹோமம் சூரிய ஹோமம் லட்சுமி பூஜை நடைபெற்றது. மறுநாள் கணபதி ஹோமம், தொடர்ந்து கலச பூஜை, அஷ்டசூடி ஹாேமம் மதியம் 12 மணியளவில் அலங்கார தீபாராதனையும் தாெடர்ந்து சமபந்தி விருந்தும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு சார்பில் சுப்பிரமணியம் பண்ணையார் ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் முன்னின்று செய்தனர்.

















Sunday, December 11, 2016

நேருக்கு நேராய் வரட்டும்

நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்...
மக்கள் சக்தியின் முன்னே கழகத்தை
வெல்ல முடியா கோழைகள் ஒரு சகாப்தத்தின்
நிறைவை தங்களுக்கான சந்தர்ப்பம் என
கருதிக்கொண்டு நரி சூழ்ச்சி வலையோடு
நயவஞ்சகர் துணையோடு ஈரிலை
இயக்கத்தை அசைத்துப் பார்க்கலாம் என்று
ஆசைப்படுகின்றனர்.
இது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.,
புரட்சித்தலைவி அம்மா எனும் “எங்கள்
தங்கங்”களால் வேரூன்றி எழுப்பப்பட்டு,
விண்முட்ட நிறுத்தப்பட்டிருக்கும் இமயம்!
இதனை கரையான்களால் அரிக்க முடியாது!
கடுகின் வெடிப்புகளால் தகர்க்க முடியாது!
கோடானு கோடி சிப்பாய் படைகள்
அரண் அமைத்து நிற்க, ஏழரைக்கோடி தமிழ்
மக்களின் இதயச் சிம்மாசனத்தில் தனி ஆசனம்
இட்டு அமர்ந்திருப்பது இந்த தன்னிகரில்லா
பேரியக்கம்!
தொண்டு மனத் துறவுகளால், அண்ணா,
வாத்தியார், அம்மா எனும் உறவுகொண்டு இது மக்களின் உள்ளங்களிலும்
இல்லங்களிலும் உதிரமாகக் கலந்து ஓடும் ஒப்பில்லாக் கழகம்!
இதனை, வசவுகளால், வதந்திகளால், அவதூறுகளால், புரளிகளால், குரளிகளா
ல், புரட்டுகளால் களங்கப்படுத்த முடியாது! இங்கே ஒற்றுமையைக் குலைத்து,
ஊடுருவலாம் என்று புல்லுருவிகள் கணக்கெல்லாம் கணப்பொழுதும் நடக்காது!
கருங்காலிகளை ஏவிவிட்டு கறைப்படுத்தவும் முடியாது! கைக்கூலிகளை
தூண்டிவிட்டு கைப்பற்றவும் முடியாது!
“அப்பலோ மருத்துவமனை சொன்னது பொய்... எய்ம்ஸ் மருத்துவர்கள்
சொன்னது பொய்... இங்கிலாந்து டாக்டர்கள் எல்லாமும் பொய்... சிங்கப்பூர்
மவுண்ட் எலிசபெத் மருத்துவர்கள் சொல்வது பொய்... மத்திய அரசு கண்காணிப்பு
பொய்... ஆளுநர் அறிக்கை பொய்... அனைத்துக் கட்சிகளின் தலைவர்களின்
விசாரிப்புகள் பொய்... ஆனால் விஷத்தை மையாக்கி, விஷமத்தை மையமாக்கி,
சில வல்லூறுகள் பரப்புகிற வதந்திகளை மட்டும் மெய்யென்று கருதுவதற்கு
தமிழகத்து மக்கள் ஒன்றும் பகுத்தாய்ந்து பார்க்கத் தெரியாத வெகுளிகள் அல்ல!
ஓடி ஓடி உழைத்து, ஊருக்கெல்லாம் கொடுத்து, உறுபசியைத் துடைத்து,
உலகத் தரக் கல்வியோடு மடிக்கணினியும் அளித்து, இல்லத்தரசிகளின் இன்னல்
களைய மிக்சிகிரைண்டர்ஃபேன் கொடுத்து, வறுமைக் கோட்டுக்குக் கீழே
வாழும் மக்களுக்கு கறவை மாடு, ஆடுகள் கருணையோடு அளித்து, பூமரத்தோடு
பசுமை வீடுகள் பாசத்தோடு கொடுத்து, தாலிக்குத் தங்கம் தந்து, தமிழுக்கு
தலைநிமிர்ந்த அங்கம் தந்து, அமைதிப் பூங்காவாக தமிழகத்தை மலர்வித்து
அதனை, எங்கள் மகராசி மறைந்த நாளிலும் நிரூபித்து, தமிழகத்து மக்களின்
இதயங்களில் தனியாசனம் இட்டு அமர்ந்திருக்கும் கருணைத் தாய் வழியிலான
கழகத்தை...
வெல்ல முடியலையே என்னும் விரக்தியில் அலையும் கடைந்தெடுத்த
கோழைகளும், கழகம் போல திகழ முடியலையே என்கிற கடுப்பில் திரிகிற
பீடைகளும், கழகத்தோடு கரம் கோர்க்க இயலலையே என்கிற விரக்தியில்
திரிகிற கழிசடைகளும் ஒரு மாசறு காவியத்தின் முடிவை, ஒரு மகோன்னத
தலைமையின் நிறைவை தங்களுக்கான வாய்ப்பு என்று கருதிக்கொண்டு,
திரைமறைவு திட்டமிட்டு, தீங்கிழைக்க நினைக்கிறார்களென்றால் அதனை
நேருக்கு நேராய் வரட்டும், நெஞ்சில் துணிவிருந்தால் என்று எதிர்கொள்ள
ஆயத்தமாய் எப்போதும் காத்திருக்கிறது கோடிச் சிங்கத்தின் தைரியம் குடி
யிருக்கும் வீரத் திருமகளின் பேரியக்கம்!
                                                                                                                            
                                                                                                                      

Monday, November 21, 2016

குரூஸ் பர்னாந்து சிலை முன்பு பொங்கல் வழங்கிய முன்னாள் கவுன்சிலர்



துாத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் கவுன்சிலர் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார்.


துாத்துக்குடி 46 வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், தியாகி கருப்பசாமி பண்ணையார் மகன் வெங்கட சுப்பிரமணியன். இவர் தனது மனைவி காந்திமதியுடன் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்துாவி பின்னர் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், துாத்துக்குடி நகருடைய தண்ணீர் தாகத்தை தீர்த்து வைத்தவர் குரூஸ் பர்னாந்து. அவர் ஒரு சமுதாயத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல.அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானவர்.

அதற்கு நன்றி கடனாக அவரது பிறந்த நாளின் போது அவரது சிலை முன்பு பொங்கலிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. காவல்துறை அனுமதி இல்லாத காரணத்தினால் இந்தாண்டு பொங்கல் வைக்க முடியவில்லை. அடுத்த ஆண்டு கண்டிப்பாக நான் எனது குடும்பத்தாருடன் பொங்கலிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Thursday, January 14, 2016

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பொங்கல் விழா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிதித்துறை தலைவர் அனுப் அகர்வால், தாமிர உற்பத்தி பிரிவு தலைவர் அனுஷ்கோயல், மனிதவள மேம்பாட்டு தலைவர் கேப்டன் சோனிகா முரளிதரன், ஏற்றுமதி பிரிவு தலைவர் ஹரிகரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
 
பொங்கல் விழாவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தாமிர ஆலையின் மகளிர் கூட்ட‌மைப்பான ஃபெமினா குழுவினர் செய்திருந்தது.