Monday, April 29, 2024

வெள்ளைக்காரனே சூப்பர்.!.

 I.T. கட்டி விட்டேன் ;

GSTகட்டி விட்டேன் ;

VATகட்டி விட்டேன் ;


CST கட்டி விட்டேன் ;

Service Tax கட்டி விட்டேன் ;

Excise Duty கட்டி விட்டேன் ;


Customs Duty கட்டி விட்டேன் ;

Octroi கட்டி விட்டேன் ;

TDS கட்டி விட்டேன் ;


ESI கட்டி விட்டேன் ;

Property Tax கட்டி விட்டேன் ;

Stamp கட்டி விட்டேன் ;


CGT கட்டி விட்டேன் ;

Water Tax கட்டி விட்டேன் ;

Professional Tax கட்டி விட்டேன் ;


Corporate Tax கட்டி விட்டேன் ;

Road Tax கட்டி விட்டேன் ;

STT கட்டி விட்டேன் ;


Education Cess கட்டி விட்டேன் ;

Wealth Tax கட்டி விட்டேன் ;

TOT கட்டி விட்டேன் ;


Capital Gain Tax கட்டி விட்டேன் ;

Congestion Levy etc etc etc கட்டி விட்டேன் ;

TOLL GATE FEE கட்டி விட்டேன் ;


மாமூல் கட்டி விட்டேன் ;


இதுக்குப் பேசாம வெள்ளக்காரன்கிட்ட அடிமையாவே இருந்துருக்கலாமேடா .... !!


அவன் கேட்டது வெறும் 

3% Tax தானே ?!?!?

.


#படித்ததில்_பிடித்தது

Thursday, April 25, 2024

தேர்தல் களத்தில் சீக்கியத்தமிழர்கள்.!.


 தூத்துக்குடி சேர்ந்த ஜீவன் சீக்கிய மதத்திற்கு மாறி ஜீவன் சிங்காக பேரை மாற்றிக் கொண்டார் .தனது ஆதரவாளர்களையும் சீக்கிய மதத்திற்கு மாற செய்துவிட்டார். பகுஜன் திராவிட கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து இந்த எம்பி தேர்தலில் தமிழ்நாட்டில் ஏழு இடங்களில்  போட்டியிட வைத்துள்ளார். சமூக ஒடுக்கு முறை தங்களை மதம் மாற வைத்தது விவசாய போராட்டத்தில் சீக்கியரின் மன உறுதி தங்களையும் சீக்கிய மதத்திற்கு மாற செய்துவிட்டது என்கின்றனர் .பட்டியலின பழங்குடி பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தங்கள் கட்சி பாடுபடும் என்கின்றனர். கான்சி ராம், பெரியார் கொள்கைகள் தங்கள் கட்சியின் கொள்கை .ஒடுக்கப்பட்ட மக்கள் என்றாவது ஒருநாள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் அதை நோக்கி தங்களுடைய பயணம் செல்கிறது. சமூக ஒடுக்கு முறை தங்களை மதம் மாற வைத்தது விவசாய போராட்டத்தில் சீக்கியரின் மன உறுதி தங்களையும் சீக்கிய மதத்திற்கு மாற செய்துவிட்டது என்கின்றனர் .பட்டியலின பழங்குடி பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தங்கள் கட்சி பாடுபடும் என்கின்றனர். கான்சி ராம், பெரியார் கொள்கைகள் தங்கள் கட்சியின் கொள்கை .ஒடுக்கப்பட்ட மக்கள் என்றாவது ஒருநாள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் அதை நோக்கி தங்களுடைய பயணம் செல்கிறது என்கின்றனர். இந்தியாவில் இந்த எம்பி தேர்தலில் 40 இடங்களில் போட்டியிடப் போவதாக தேசிய தலைவர் ஜீவன் சிங் சொல்லுகிறார். 

 தமிழகத்தில் மதுரையில் பாண்டியன் சிங் ,ராமநாதபுரத்தில் மணி வாசகசிங், விருதுநகரில் கொற்கை பழனி, திருநெல்வேலியில் செல்வன் சிங் ,தென்காசியில் சீதா கவுர் என்ற பெண்மணி,கன்னியாகுமரியில் ராஜன் சிங், தூத்துக்குடியில் சண்முக சுந்,தர சிங் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்   தலையில் தலைப்பாகை கட்டி இடுப்பில் உடைவாள் ஏந்தி வாக்கு சேகரித்தஇந்த திராவிட தமிழ் சீக்கியர்கள் எவ்வளவு வாக்குகள் வாங்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. 

அரசு பள்ளி நமது பள்ளி..!..

 *உஷாரய்யா உஷாரு!*


*வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்*.


*கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி தானா?*


*CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற* 

*தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?*


*நல்ல வேலைக்குப் போகவா?*


*ஆங்கிலம் சரளமாகப் பேசவா?*

*குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?*


*ஏன்?*

*எதற்கு?* *....என்று சிந்தித்ததுண்டா?*


*Pre kg 25,000 இல் தொடங்குகிறது*


*Lkg         40,000*

*Ukg         50,000*

*1st          60,000*

*2nd         70,000*

*3rd          80,000*

*4th          90,000*

*5th        1,00,000*

*6to8      1,20,000*

*9to10.   1,50,000*

*11to12  2,00,000 இலட்சம்....*


*ஆக மொத்தம்*

*9,85,000 ரூபாய்.*

 

*இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்பு தான்.*


*நகரத்தில் இருக்கின்ற பெரிய பள்ளிகளில் 20 இலட்சத்தில் இருந்து 40 இலட்சம் வரை வாங்குறாங்க.*


*சரி!*

*இதெல்லாம் இருக்கட்டும், இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?*


*உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளியில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்.*


*அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் உங்களால்.?*


 *ஒன்றை நினைவில் வையுங்கள்.....  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்குக் கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவழித்து?*


*தமிழகத்தில் 9 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வர முடியுமா?*

*சரி!*

*இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?*


*CBSE கல்லூரியிலா?*

*அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே !?*


*அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான், இல்லையா?*


*இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,*

*மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?*


*இல்லை!*

*இல்லவேஇல்லை!*


*இப்போது உங்கள் பிள்ளைகளோடு, அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?*


*பத்து இலட்சத்திற்கு மேல் செலவளித்துப் படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைப் பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கவில்லையா ?*


*இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி, கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?*


*உங்கள் பிள்ளை சாதனையாளனா?*


*இல்லை.. பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?*


*உங்களுக்குத் தெரியுமா.....*


 *TNPSC தேர்வில் தேர்வாகும் 99 விழுக்காட்டினர் அரசுப்பள்ளியில், தமிழில் படித்தவர்கள் என்று?*


*TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?*


 *இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?*


*ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?*


*உங்களால் ஆணித்தரமாக எடுத்துக் கூற முடியுமா... CBSE , மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?*


*அந்தப் பள்ளிகளைப் பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ?*


*இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே?*


*அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்?*


**வாருங்கள் குரல் கொடுப்போம்* .....  


👍ஆங்கில வழியில் கல்வி என்ற மோகம் தற்போது *அரசு பள்ளியிலும் ஆங்கில வழி கல்வி உள்ளது* 


 👍 *வெட்டி கௌரவத்தை விடுவோம்* 


👍  *அரசு* 

 *பள்ளியில்* *படிப்போம்* 


👍 *ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம்* 


👍 *அரசின் அனைத்து சலுகைகளையும் பெறுவோம்* 


👍 *இதனால்* 

*நம் செலவுகள் குறைக்கப்பட்டு, நம் எதிர்காலத்திற்காகபணம் சேமிக்கப்படும்.*


*சிந்திப்போம்!*

*மற்றவரின் சிந்தனையைத் தூண்டுவோம்!*

Wednesday, April 10, 2024

தூத்துக்குடி வெற்றி கனி யார் பக்கம்.!.

 தூத்துக்குடி நாடாளுமன்ற களத்தில் முயலை, ஆமை வென்ற கதையாக இருந்த நிலைமாறி

ஸ்வீட் பாக்ஸ் தாராளமாக அ.தி.மு.க.வேட்பாளர் வழங்காததால்

பூத் கமிட்டி, வார்டு செயலாளர், தேர்தல் பணிபொறுப்பாளர்களிடம் சோர்வுநிலை

       தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல்களம், தி.மு.க.அ.தி.மு.க. இருந்த நிலை அ..தி.மு.க, தி.மு.க. உருவானது.

       அ.தி.மு.க.வினருக்கு வேட்பாளர் ஸ்வீட் பாக்ஸ் தாராளம் காட்டதால், பூத் கமிட்டிதேர்தல் பொறுப்பாளர்கள்  காற்று இறக்கிய பலூன்போல 

சுருங்கி விட்டதால் பணியில் சுணக்கம் காணப்படுகிறது.

      2019 நாடாளுமன்ற தேர்தல் 2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.த.மா.க அ.தி.மு.கவினருக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்க முன்வராதால் நாடாளு, சட்டமன்ற தேர்தல் தோல்வி அடைந்தது.தி.மு.க. ஸ்வீட் பாக்ஸ் அள்ளிவீசியது.

       அ.தி.மு.க.தலைமை பணிமனையில் தேனீ சுற்றுவதுபோல தொண்டர்கள் சுழன்று வருவர். இன்று டீ, காபி வாங்கி தர ஏங்கும் பரிதாப நிலை.

      நாடாளுமன்ற வேட்பாளர் பெரிய கோடீஸ்வரர் ஸ்வீட் பாக்ஸ்க்கு பஞ்சம் இருக்காது பேசிவந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

      தி.மு.க.வில் கோஷ்டி பூசல் இலைமறைவாக உள்ளது.அ.தி.மு.க.வில்ஓபனாக தெரிகிறது.

      அ.தி.மு.க.வினருக்கு ஸ்வீட் பாக்ஸ் போதிய அளவு வேட்பாளர் வழங்க முன்வரதால் வெற்றி கனி மாறிவிடும் ஏற்பட்டது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தூத்துக்குடி புரோகிராம் கேன்சல் செய்தாராம். வேட்பாளர்தே.மு.தி.க.வினருக்கு ஸ்வீட் பாக்ஸ் இறக்கிவிடவில்லை புகார் சென்றதாம்.

       அ.தி.மு.க.வினரும் தங்கள் பங்கிற்கு ஓலையை தலைமைக்கு தட்டிவிடுகின்றனர். தலைமை கண் திறந்தால் வேட்பாளர் ஸ்வீட் பாக்ஸ் அள்ளிவீசுவார். வெற்றி கனியார் கையில் உள்ளது பார்ப்போம்.