Monday, July 23, 2012

பெண், கள்ளக் காதலனை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த ஜாதி சபை


ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோலார் கிராமத்தைச் சேர்ந்த ஜாதி சபை திருமணமான பெண்ணையும், அவரது கள்ளக் காதலனையும் மரத்தில் கட்டி வைத்து அவர்களின் ஆடைகளை அகற்றிவிட்டு அடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது கோலார் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மீனா (25). அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்த அறிந்த கிராமத்தினர் அவர்களைத் தேடித் திரிந்தனர்.
ஒரு வழியாக கடந்த சனிக்கிழமை மாலை அவர்களை கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்ததும் ஜாதி சபை கூடியது. அந்த சபையில் கள்ளக்காதல் ஜோடியை கூடியிருந்த கிராமத்தினர் முன்பு மரத்தில் கட்டி வைத்து, அவர்களை நிர்வாணமாக்கி அடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீது கிராமத்தினர் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ஒரு போலீஸ் குழு வந்து அந்த இருவரையும் கிராமத்தினரிடம் இருந்து மீட்டது. அந்த கள்ளக்காதல் ஜோடி தற்போது போலீசாரின் பாதுகாப்பில் உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜாதி சபையினரையும், கிராமத்தினரையும் கைது செய்ய முயன்று வருகின்றனர்.

Sunday, July 8, 2012

தூத்துக்குடி மாநகராட்சி பிரச்சனைமேல் பிரச்சனை!

தூத்துக்குடி மாநகராட்சி பிரச்சனைமேல் பிரச்சனை!
புகாரை விசாரிக்க முதல்வர் நியமித்த மூத்த தலைமைக் கழக நிர்வாகி! கலக்கத்தில் கவுன்சிலர்கள்!!
தூத்துக்குடி ஜுலை 09....
தூத்துக்குடி மாநகராட்சி பிரச்சனைமேல் பிரச்சனை. புகாரை விசாரிக்க முதல்வர் நியமித்த மூத்த தலைமைக் கழக நிர்வாகி! கலக்கத்தில் கவுன்சிலர்கள்!! தூத்துக்குடி மாநகராட்சி மொத்தம் 60 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஆளும் கட்சியான அதிமுக-விற்கு அதிக கவுன்சிலர்கள் உள்ளனர். மேயராக அதிமுக-வை சேர்ந்த சசிகலாபுஷ்பா உள்ளார். மொத்தம் உள்ள 4 மணிடல தலைவர்களில் 2 மண்டல தலைவராக அதிமுக-வை சேர்ந்தவரும், 1 மண்டல தலைவராக திமுக-வை சேர்ந்தவரும், மற்றொரு மண்டல தலைவராக காங்கிரஸை சேர்ந்தவரும் உள்ளார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி கூடுதலாக பலகோடி நிதி ஒதுக்கி வருகிறார்.  உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று 6 மாதம் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது.  இந்த ஆண்டு 3-ம் மாதத்தில் இருந்து பல்வேறு பிரச்சனையில் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளது என்று புகர்h மேல் புகார் தமிழக முதல்வருக்கு சென்றது.  குறிப்பாக மேயரின் ஒப்பந்தக்காரரிடம் கமிஷன் பிரச்சனை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் மேயர் சரியான முறையில் அணுகவில்லை என்று பல்வேறு புகார்கள் மேயர்மேல் சென்றது. மேலும் அதிமுக-வை சேர்ந்த கவுன்சிலர்கள் மேல் பொதுமக்கள் புகார் அனுப்பினார்கள்.  குடிநீர் இணைப்புக்கு அதிக கட்டணம், சொத்துவரி மாற்றத்தில் அதிக வசூல், அதிமுக-வை சேர்ந்த கவுன்சிலர்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் புகாராக சென்றது.  இதனையடுத்து, கடந்த மாதம் தமிழக முதல்வர் உளவுத்துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். உளவுத்துறை விசாரணை நடத்தி வரும் வேளையில் புகாh மனு மீதுஉடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டிய முதல்வர் கொடநாட்டில் இருந்து வரும் முதல்வர் மூத்த ஐ.ஏ.ஏஸ். அதிகாரி ஒருவர் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவும் பிரச்சனைகளை உடனடியாக விசாரித்து, அறிக்கை தரும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படியாக அதிகாரியும் கடந்த வாரம் 2 நாட்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்து புகார் உண்மையா என்று விசாரித்து வந்தார்.  இந்த நிலையில் தலைமை நிலையச் செயலாளரும், மூத்த அமைச்சருமான செங்கோட்டையனிடம் தூத்துக்குடி மாநகராட்சி புகாரில் அதிமுக-வை சேர்ந்த கவுன்சிலர்கள் யார் யாரெல்லாம் புகாருக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் பின்னணி பலம் என்ன? அந்தக் கவுன்சிலர்களுக்கு கட்சியில் கை கொடுக்கும் நபர் யார் போன்ற விபரங்களை விசாரித்து அறிக்கை தரும்படி உத்தரவிட்டுள்ளார்.  இந்த தகவல் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவி உள்ளது. இது பற்றி அதிமுக கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது, மேயர் சசிகலாபுஷ்பா மீது 3 ஒப்பந்தக்காரர்கள் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகாராக அனுப்பி இருந்தனர்.  மேலும் திமுக மாவட்ட செயலாளரிடம் மேயர் மறைமுகமாக தொடர்பு வைத்துள்ளார் என்றும், புகாh செய்யப்பட்டிருந்தது. அதிடுக-வை சேர்ந்த ஆண் கவுன்சிலர்கள் 6 பேர், 2 மண்டல தலைவர்கள், 4 பெண் கவுன்சிலர்கள் செய்யும் அட்டகாசங்கள் புகாராக முதல்வருக்கு சென்று உள்ளது. இந்த புகார்கள் மீதுதான் தற்போது 3 குழுவாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் அறிக்கை முதல்வருக்கு சென்றவுடன் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னைக்கு அழைத்து கடுமையான முறையில் எச்சரிக்கை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிய வருகிறது.
முதல்வருக்கு அனுப்பப்ட்ட புகாரில் ஆளாகி உள்ளவர்கள், மேயர் சசிகலாபுஷ்பா, மண்டல தலைவர்கள் வெள்ளப்பாண்டியன், கோகிலா, கவுன்சிலர்கள் வீரபாகு, சரவணன், முபாரக்ஜான், தவசிவேல், உள்பட 6 பேர், பெண் கவுன்சிலர்கள் ராஜலட்சுமி, சாந்தி, மெஜிலா, உள்பட 4 பேர் மீதும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் திமுக-வை சேர்ந்த கலைச்செல்வி, திமுக மண்டல தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் மீதும் விசாரணை நடைபெறுகிறது.

Friday, July 6, 2012

பாரம்பரிய கடற்பகுதியில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் அப்பாவி இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்துவதை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு வலியுறுத்தல்.


சென்னை, ஜூன் 29
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தியுள்ள தாக்குதல் சம்பவம், தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்திருப்பதாகவும், பாரம்பரிய கடற்பகுதியில், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் அப்பாவி இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துன்புறுத்துவதைக் கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், 26.6.2012 அன்று இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 25ம் தேதி 704 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
தமிழக அணைகளை பாதுகாக்க ரூ.759 கோடி - உலக வங்கி ஒப்புதல்              
தமிழக அணைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆராய தமிழக அரசு சார்பாக சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவுக்கு வசீகரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கன்னியாகுமரி அணைகளை ஆராய்ச்சி செய்தபின் செய்தியாளர்களிடம் வசீகரன் கூறியதாவது:

கன்னியாகுமரி அணைகள் பாதுகாப்பான நிலையில் உள்ளது. அணைகளில் ஏற்படும் நீர் கசிவு வரையறுக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது. மேலும் தமிழகத்தில் 104 அணைகள் உள்ளன. இந்த அணைகளை பாதுகாக்க ரூ.759 கோடி நிதியை வழங்க உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் 6 ஆண்டுகளில் பலப்படுத்தப்பட
மேற்கு தொடர்ச்சி மலை பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டதால் பெரியாற்றில் புதிய அணை கட்ட முடியாது   [வெள்ளி - 6 ஜூலை-2012 - 12:37:27 காலை ]
ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாரம்பரிய மலையாக தேர்வு செய்து அறிவித்துள்ளது. கேரளா தமிழ்நாடு கர்நாடகா கோவா மகாராஷ்டிரா குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் 1600 கி.மீ. தூரம் நீண்டு 1 லட்சத்து 74 ஆயிரத்து 700 சதுர கி.மீ. பரப்பில் பரந்துள்ளது. அரிய 325 உயரினங்கள் தேசிய வனப்பூங்கா புலி யானைகள் உள்ளிட்ட சரணாலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதிகள் இதில் அமைந்துள்ளன.

உலக பாரம்பரிய மலையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் கூடுதல் பராமரிப்பு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மூலம் ஆய்வு நடத்தி அறிக்கை பெற்றுள்ளது. இந்த குழு தேசிய வனப்பூங்கா புலி யானைகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதி நிறைந்த 60 சதவீத பகுதிகளில் புதிய அணை கட்டக்கூடாது

மின் நிலையங்கள் ரயில் பாதை கனிம சுரங்கம் உள்ளிட்ட எந்த திட்டங்களும் அனுமதிக்கக் கூடாது சுற்றுச் சூழல் பாதிக்கும் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு கேரளா கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையும் மீறி தான் நிபுணர் குழு பரிந்துரையை ஏற்று மத்திய அரசு மேற்கு தொடர்ச்சி மலை குறித்த அரிய புள்ளி விவரங்களை யுனெஸ்கோ அமைப்புக்கு வழங்கியது. அதன்படி யுனெஸ்கோ இந்த மலையை பாரம்பரிய இடமாக தேர்வு செய்துள்ளது. எனவே மத்திய அரசு ஏற்றுள்ள நிபுணர் குழு அறிக்கையை நிறைவேற்றும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்டும் முயற்சியில் கேரளா தீவிரம் காட்டி வருகிறது. புதிய அணை கட்ட திட்டமிடும் பகுதி உலக பாரம்பரிய மலையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரளா புதிய அணை கட்டும் முயற் சிக்கு வலுவான தடை ஏற்பட்டுள்ளது