Friday, July 6, 2012

பாரம்பரிய கடற்பகுதியில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் அப்பாவி இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்துவதை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு வலியுறுத்தல்.


சென்னை, ஜூன் 29
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தியுள்ள தாக்குதல் சம்பவம், தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்திருப்பதாகவும், பாரம்பரிய கடற்பகுதியில், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் அப்பாவி இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துன்புறுத்துவதைக் கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், 26.6.2012 அன்று இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 25ம் தேதி 704 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment