Sunday, July 8, 2012

தூத்துக்குடி மாநகராட்சி பிரச்சனைமேல் பிரச்சனை!

தூத்துக்குடி மாநகராட்சி பிரச்சனைமேல் பிரச்சனை!
புகாரை விசாரிக்க முதல்வர் நியமித்த மூத்த தலைமைக் கழக நிர்வாகி! கலக்கத்தில் கவுன்சிலர்கள்!!
தூத்துக்குடி ஜுலை 09....
தூத்துக்குடி மாநகராட்சி பிரச்சனைமேல் பிரச்சனை. புகாரை விசாரிக்க முதல்வர் நியமித்த மூத்த தலைமைக் கழக நிர்வாகி! கலக்கத்தில் கவுன்சிலர்கள்!! தூத்துக்குடி மாநகராட்சி மொத்தம் 60 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஆளும் கட்சியான அதிமுக-விற்கு அதிக கவுன்சிலர்கள் உள்ளனர். மேயராக அதிமுக-வை சேர்ந்த சசிகலாபுஷ்பா உள்ளார். மொத்தம் உள்ள 4 மணிடல தலைவர்களில் 2 மண்டல தலைவராக அதிமுக-வை சேர்ந்தவரும், 1 மண்டல தலைவராக திமுக-வை சேர்ந்தவரும், மற்றொரு மண்டல தலைவராக காங்கிரஸை சேர்ந்தவரும் உள்ளார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி கூடுதலாக பலகோடி நிதி ஒதுக்கி வருகிறார்.  உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று 6 மாதம் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது.  இந்த ஆண்டு 3-ம் மாதத்தில் இருந்து பல்வேறு பிரச்சனையில் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளது என்று புகர்h மேல் புகார் தமிழக முதல்வருக்கு சென்றது.  குறிப்பாக மேயரின் ஒப்பந்தக்காரரிடம் கமிஷன் பிரச்சனை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் மேயர் சரியான முறையில் அணுகவில்லை என்று பல்வேறு புகார்கள் மேயர்மேல் சென்றது. மேலும் அதிமுக-வை சேர்ந்த கவுன்சிலர்கள் மேல் பொதுமக்கள் புகார் அனுப்பினார்கள்.  குடிநீர் இணைப்புக்கு அதிக கட்டணம், சொத்துவரி மாற்றத்தில் அதிக வசூல், அதிமுக-வை சேர்ந்த கவுன்சிலர்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் புகாராக சென்றது.  இதனையடுத்து, கடந்த மாதம் தமிழக முதல்வர் உளவுத்துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். உளவுத்துறை விசாரணை நடத்தி வரும் வேளையில் புகாh மனு மீதுஉடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டிய முதல்வர் கொடநாட்டில் இருந்து வரும் முதல்வர் மூத்த ஐ.ஏ.ஏஸ். அதிகாரி ஒருவர் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவும் பிரச்சனைகளை உடனடியாக விசாரித்து, அறிக்கை தரும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படியாக அதிகாரியும் கடந்த வாரம் 2 நாட்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்து புகார் உண்மையா என்று விசாரித்து வந்தார்.  இந்த நிலையில் தலைமை நிலையச் செயலாளரும், மூத்த அமைச்சருமான செங்கோட்டையனிடம் தூத்துக்குடி மாநகராட்சி புகாரில் அதிமுக-வை சேர்ந்த கவுன்சிலர்கள் யார் யாரெல்லாம் புகாருக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் பின்னணி பலம் என்ன? அந்தக் கவுன்சிலர்களுக்கு கட்சியில் கை கொடுக்கும் நபர் யார் போன்ற விபரங்களை விசாரித்து அறிக்கை தரும்படி உத்தரவிட்டுள்ளார்.  இந்த தகவல் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவி உள்ளது. இது பற்றி அதிமுக கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது, மேயர் சசிகலாபுஷ்பா மீது 3 ஒப்பந்தக்காரர்கள் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகாராக அனுப்பி இருந்தனர்.  மேலும் திமுக மாவட்ட செயலாளரிடம் மேயர் மறைமுகமாக தொடர்பு வைத்துள்ளார் என்றும், புகாh செய்யப்பட்டிருந்தது. அதிடுக-வை சேர்ந்த ஆண் கவுன்சிலர்கள் 6 பேர், 2 மண்டல தலைவர்கள், 4 பெண் கவுன்சிலர்கள் செய்யும் அட்டகாசங்கள் புகாராக முதல்வருக்கு சென்று உள்ளது. இந்த புகார்கள் மீதுதான் தற்போது 3 குழுவாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் அறிக்கை முதல்வருக்கு சென்றவுடன் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னைக்கு அழைத்து கடுமையான முறையில் எச்சரிக்கை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிய வருகிறது.
முதல்வருக்கு அனுப்பப்ட்ட புகாரில் ஆளாகி உள்ளவர்கள், மேயர் சசிகலாபுஷ்பா, மண்டல தலைவர்கள் வெள்ளப்பாண்டியன், கோகிலா, கவுன்சிலர்கள் வீரபாகு, சரவணன், முபாரக்ஜான், தவசிவேல், உள்பட 6 பேர், பெண் கவுன்சிலர்கள் ராஜலட்சுமி, சாந்தி, மெஜிலா, உள்பட 4 பேர் மீதும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் திமுக-வை சேர்ந்த கலைச்செல்வி, திமுக மண்டல தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் மீதும் விசாரணை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment