Thursday, April 25, 2024

தேர்தல் களத்தில் சீக்கியத்தமிழர்கள்.!.


 தூத்துக்குடி சேர்ந்த ஜீவன் சீக்கிய மதத்திற்கு மாறி ஜீவன் சிங்காக பேரை மாற்றிக் கொண்டார் .தனது ஆதரவாளர்களையும் சீக்கிய மதத்திற்கு மாற செய்துவிட்டார். பகுஜன் திராவிட கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து இந்த எம்பி தேர்தலில் தமிழ்நாட்டில் ஏழு இடங்களில்  போட்டியிட வைத்துள்ளார். சமூக ஒடுக்கு முறை தங்களை மதம் மாற வைத்தது விவசாய போராட்டத்தில் சீக்கியரின் மன உறுதி தங்களையும் சீக்கிய மதத்திற்கு மாற செய்துவிட்டது என்கின்றனர் .பட்டியலின பழங்குடி பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தங்கள் கட்சி பாடுபடும் என்கின்றனர். கான்சி ராம், பெரியார் கொள்கைகள் தங்கள் கட்சியின் கொள்கை .ஒடுக்கப்பட்ட மக்கள் என்றாவது ஒருநாள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் அதை நோக்கி தங்களுடைய பயணம் செல்கிறது. சமூக ஒடுக்கு முறை தங்களை மதம் மாற வைத்தது விவசாய போராட்டத்தில் சீக்கியரின் மன உறுதி தங்களையும் சீக்கிய மதத்திற்கு மாற செய்துவிட்டது என்கின்றனர் .பட்டியலின பழங்குடி பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தங்கள் கட்சி பாடுபடும் என்கின்றனர். கான்சி ராம், பெரியார் கொள்கைகள் தங்கள் கட்சியின் கொள்கை .ஒடுக்கப்பட்ட மக்கள் என்றாவது ஒருநாள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் அதை நோக்கி தங்களுடைய பயணம் செல்கிறது என்கின்றனர். இந்தியாவில் இந்த எம்பி தேர்தலில் 40 இடங்களில் போட்டியிடப் போவதாக தேசிய தலைவர் ஜீவன் சிங் சொல்லுகிறார். 

 தமிழகத்தில் மதுரையில் பாண்டியன் சிங் ,ராமநாதபுரத்தில் மணி வாசகசிங், விருதுநகரில் கொற்கை பழனி, திருநெல்வேலியில் செல்வன் சிங் ,தென்காசியில் சீதா கவுர் என்ற பெண்மணி,கன்னியாகுமரியில் ராஜன் சிங், தூத்துக்குடியில் சண்முக சுந்,தர சிங் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்   தலையில் தலைப்பாகை கட்டி இடுப்பில் உடைவாள் ஏந்தி வாக்கு சேகரித்தஇந்த திராவிட தமிழ் சீக்கியர்கள் எவ்வளவு வாக்குகள் வாங்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. 

No comments:

Post a Comment