Thursday, March 28, 2013


ஸ்டெர்லைட் போரட்டத்தை முறியடிக்க போலீஸ் முயற்சி: நேரடி ஒளிபரப்பிற்கு தடை ‍- பரபரப்பு!!



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆலையைக் கண்டித்து நடைபெறும் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராஜாஜி பூங்கா முன்பு திரண்டனர்.

ராஜாஜி பூங்காவிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை நோக்கி பேரணி செல்வதற்காக வணிகர்க்ள, மீனவ அமைப்பினர், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு தரப்பைப் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ராஜாஜி பூங்கா முன்பு குவிந்துள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் வந்துள்ளனர். 

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய அட்டைகளை தங்கள் கைகளில் ஏந்தியவாறு கோஷமிட்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் போராட்டம் துவங்குவதற்கு முன்னரே, மக்களை கைது செய்ய தயாராகினர். பேராட்டக்காரர்களை கைது செய்யதற்காக சுமார் 10க்கும் மேற்பட்ட பேருந்துகளை அங்கு நிறுத்தப்பட்டது. 

இதனால், மக்கள் ஆவேசம் அடைந்தனர். ஸ்டெர்லைட் ஆதரவு போலீசார்களே உடனே திரும்பிப்போ, பேருந்தை அப்புறப்படுத்தப்படாவிட்டால் பஸ்கள் நொறுக்கப்பட்டும் என்று போலீசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேருந்துகள் அனைத்தும் தென்பாகம் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. 


புதிய தலைமுறைக்கு தடை? பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த போராட்டத்தினை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக புதிய தலைமுறை, சன் தொலைக்காட்சி  சேனல்களைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து வ்ந்திருந்தனர். அப்போது போராட்டத்தினை நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், பத்திரிக்கையாளர்களை தரைக்குறைவாக பேசி வயர்களை பிடுங்கி எரிந்து தடை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பத்திரிக்கையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி ஏ.எஸ்.பி. மகேஷ் பத்திரிக்கையாளர்களுடன் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவும் காவல்துறையை கண்டித்தார்.

No comments:

Post a Comment