Friday, January 3, 2014

தூத்துக்குடி வந்த வெளிநாட்டினர்

  >

-

கல்
 


ஆட்டோ ரிக்ஷாவில் தூத்துக்குடி வந்த வெளிநாட்டினர் - சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி உற்சாகம்..!!


தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தினை அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 26 பேர் தொடங்கிய  ரிக்ஷா சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுலா பயணம் தூத்துக்குடி வந்தது.

சென்னையில் உள்ள ஈவன் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற தனியார் அமைப்பு கடந்த 9 ஆண்டுகளாக இந்தப் பயணத்தை நடத்தி வருகிறது. ஜெர்மன், ஹாலந்து, ஆஸ்திரேலியா, லண்டன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 ஆண்கள், 9 பெண்கள் என 26பேர்  9 அணிகளாகப் பிரிந்து 9 ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.

சென்னையில் இருந்து கடந்த 26ம் தேதி பயணத்தைத் தொடங்கிய அவர்கள் புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, வழியாக நேற்று தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடியில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் இன்று தூத்துக்குடியில் எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் டூவிபுரத்தைச் சேர்ந்த எக்ஸ்டரீம் நைட்ஸ் அணியுடன் கிரிக்கெட் விளையாடினர். 

எக்ஸ்டரீம் நைட்ஸ் அணியில் வசந்த் தலைமையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர்களும், ரிக்ஷா சேலஞ்ச் அணியில் ரூபர்ட் தலைமையிலான வெளிநாட்டினரும் களமிறங்கி நட்புறவு கிரிக்கெட் விளையாடினர். கிரிக்கெட் விளையாடிய உள்ளூர் சிறுவர்களுடன் சேர்ந்து புகைப்பட எடுத்துக் கொண்டனர்.தமிழக சுற்றுப் பயணம் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் வெளிநாட்டினர் தெரிவித்தனர். 

இவர்கள் நாளை குற்றாலம் செல்கின்றனர். அங்கிருந்து 5ம் தேதி குமரி செல்கின்றனர். பின்னர் 6ம் தேதி திருவணந்தபுரம் புறப்பட்டு செல்கின்றனர். அங்கிருந்து விமானம் மூலம் சொந்த நாடுகளுக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.இந்த பயணத்துக்கான ஏற்பாடுகளை சென்னை ஈவன் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிர்வாக இயக்குநர் அரவிந்த் பிரம்மானந்தம் செய்திருந்தார். 


No comments:

Post a Comment