Saturday, July 20, 2013

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி ஆக.5ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, பேராலய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் 431-வது ஆண்டு திருவிழா மற்றும் பேராலயம் எழுப்பப்பட்டு 300வது ஆண்டு நிறைவு விழா கொண்டடப்படுகிறது. இதையொட்டி தங்கத் தேர் திருவிழா நடைபெறுகிறது. திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து 8.30மணிக்கு கொடியேற்றமும் நடைபெறும். 

அன்று மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் சூட்டப்படுகிறது. முன்னதாக 25ம் தேதி மாலை கொடி பவனி நடைபெறுகிறது. 3ம் திருவிழாவான 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் புதுநன்மை, கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இரவு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்ட் 4-ம் அன்று இரவு 7மணிக்கு ஆயர் பெருவிழா மாலை ஆராதாணை நடக்கிறது. அன்பின் இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

அன்று இரவு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ திருப்பவனி நடக்கிறது. திருவிழாவி்ன முக்கிய நிகழ்வான ஆகஸ்ட் 5ம் தேதி திங்கட்கிழமை அன்னையின் பெருவிழாவான அன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.12மணிக்கு 2ம் திருப்பலியும், 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும் நடக்கிறது. 

காலை 7 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில், மதுரை பேராயர் பீட்டர் பர்னான்டோ தேங்கத் தேர் பவனியை அர்ச்சித்து தொடங்கி வைக்கிறார். கோட்டாறு ஆயர் பீட்டர் ரெம்ஜியூஸ், சிவகங்கை ஆயர் சூசை மானிக்கம் ஆகியோர் மறையுரை நிகழ்த்துகின்றனர். பகல் 12 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது. 

15வது தங்கத் தேரோட்டம் 

பனிமய மாதா தங்கத் தேர் திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கி ஆக.5ம் தேதி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் எழுப்பப்பட்டு 300வது ஆண்டு நிறைவையொட்டி தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. சமூக, சமய நல்லினக்க திருவிழாக இந்த திருவிழா நடைபெறும். இது ஆலயத்தின் 15வது தங்கத் தேரோட்டம் ஆகும். ஆலயத்தில் வீற்றிருக்கும் மாதாவே தேர்ப்பனியாக வ்நது ஆசி வழங்குகிறார். 

தங்கத் தேர் திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கபட்டுள்ளளது. தங்கத்தேர் 53 அடி உயரம் கொண்டது. இதில், மாதா உருவம் மற்றும் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டவர்களின் உருவங்களும் இடம்பெற்றிருக்கும். இதில், முத்து, பவளம், தங்கம் போன்றவற்றால் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அன்னையின் அருள் பெறுவதற்கு அனைவரும் அமைதியாகவும், பக்தி பூர்வமாகவும் திருவிழா நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். 

திருவிழாவில் நகரில் உள்ள அனைத்து மண்ணின் மைந்தர்கள், குருக்கள், துறவியர், அருட்சகோதர, சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள். இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை எனது தலைமையில் உதவி தந்தையர்கள் ஆக்னஸ் அமல்ராஜ், களப்பணியாளர் சகோ. பிரபு, மற்றும் பணிக்குழுவினர் செய்து வருகின்றன. திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பங்குத் தந்தை வில்லியம் சந்தாணம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment