Monday, July 8, 2013

சேதுசமுத்திர திட்டத்திற்கு இறுதி ஊர்வலம் நடத்திய மீனவர்கள்: தூத்துக்குடியில் நூதன போராட்டம் - பரபரப்பு




சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தூத்துக்குடி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சேதுசமுத்திர திட்டம் என்று எழுதப்பட்ட சவப்பெட்டியை கடலில் விடும் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் சேது சமுத்திர திட்டத்தை கைவிடக் கோரி மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் நடத்துகின்றனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்த்தில் உள்ள கடலோர கிராமங்களில் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், மீனவர்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சேதுசமுத்திர திட்டம் என்று எழுதப்பட்ட சவப்பெட்டிக்கு மாலை அணிவித்து, இறுதி ஊர்வலம் நடத்தி பின்னர் கடலில் விடும் போராட்டமும் நடைபெற்றது. இதில், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பர்னாந்து, ஜான்சன், சேவியர் வாஸ் உட்பட பலர் கல்நது கொண்டனர். 

தூத்துக்குடியில் சேது சமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் வேளையில், மீனவர்களின் இந்த போராட்டம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment