Wednesday, July 17, 2013

தூத்துக்குடியில் மேயர் சசிகலாபுஷ்பா திடீர் ஆய்வு



தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா தலைமையில் அதிகாரிகள் இன்று மாநகராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நீரேற்று நிலையம், சத்திரம் தெரு அம்மா உணவகம், பக்கிள் ஓடை, ரோச் பூங்கா ஆகியவற்றை பார்வையி்ட்டனர். 

பின்னர் மேயர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வரின் ஆணையின்படி வரும் மழைகாலத்தை முன்னிட்டு மழை நீர் நகரில் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பக்கிள் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், தூத்துக்குடியில் உள்ள அம்மா உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவுகள் தயார் செய்யப்படுகின்றனவா? என கண்காணிக்கப்பட்டது. ராஜாஜி நீரேற்று நிலையத்தில் குடிநீரில் குளோரின் ஒழுங்காக கலக்கப்படுகிறதா? மாநராட்சி லாரிகள் முறையாக தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனவா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி மாநகரத்தை அழகுபடுத்தும் வகையில் நகரின் முக்கிய இடங்களில் ரவுண்டானாக்கள் அமைத்து, அதில் செடிகள் வைத்து பராமரிக்கப்படும். பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தலைவர்கள் சிலைகள் அருகே புல் தோட்டங்கள் அமைக்கப்படும். இது தொடர்பாக சம்பந்தபட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.  

ஆய்வின் போது, மாநகரட்சி ஆணையர் மதுமதி, செயற் பொறியாளர் ராஜகோபால், மாநகர் நல அலுவலர் டாக்டர் பிரதீப் விஷ்னுகுமார், இளநிலை பொறியாளர்கள் சரவணன், ஆறுமுகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஞானசேகரன், மற்றும் கவுன்சிலர்கள் மேயருடன் உடன் சென்றனர். 

No comments:

Post a Comment