Sunday, March 8, 2015

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம்



ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சகி மகளிர் மேம்பாட்டுத்திட்ட சுய உதவிக்குழு மகளிரும், ஸ்டெர்லைட் மகளிர் ஊழியர்கள் குழுவான டியு- பெமினா விப்ஜியார் 2015 இணைந்து உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்டெர்லைட் முதனமை செயல் அலுவலர் ராம்நாத் முன்னிலை வகித்தார். கவிஞர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில், வழக்கறிஞர் சொர்ணலதா, வேதாந்தா குழும தகவல் தொடர்பு மற்றும் சமுதாய வளர்ச்சி துறை தலைவர் ரோமா பல்வானி வாழ்த்துரை வழங்கினர். ஸ்டெர்லைட் மனித வளர்ச்சி துறை தலைவர் சுரேஷ் போஸ், சமூக தொடர்புத்துறை ரமேஷ், துளசி சமூக அறக்கட்டளை தலைவர் தனலெட்சுமி, தாயகம் ஜெயகனி, ஏபிஎஸ். பவுண்டேசன் டென்சி, பெல் கல்விக்கழகம் பியூலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகளிர்தின விழாவில், 8சுய உதவிக்குழுவினருக்கும், 8மகளிர் தொழில் முனைவோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற 120 மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுவைச் சேர்ந்த மகளிர்கள் கலந்து கொண்டனர். மேலும், விழா வளாகத்தில் வளரிளம் பெண்களும், தாய்மார்களும் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் இலவச மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் ஏராளமானோர் பயன்பெற்றனர்.


ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் மகளிர் மேம்பாட்டு திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அப்பகுதி பெண்களின் சமூக பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு தொழிற்பயிற்சியும் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1400 குழுக்கள் அமைக்கப்பட்டு 19ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக மாறியது மட்டுமின்றி, தொழில் முனைவோர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று விழாவில் ஸ்டெர்லைட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment