Wednesday, August 7, 2013

தூத்துக்குடி ஆட்சியர் ஆஷிஷ்குமார், இடம் மாற்றப்பட்டதற்கு, ராமதாஸ் கண்டனம்
பதிவு செய்த நாள் -
ஆகஸ்ட் 07, 2013  at   3:42:23 PM
 

தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், இடம் மாற்றப்பட்டதற்கு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டத்தில், 23 ஏக்கரில் மட்டும் கார்னெட் மணலை அள்ள 2 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் துணையுடன், அந்த 2 நிறுவனங்களும், 200க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாக கார்னெட் மணலை அள்ளி வந்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு மாநிலத்தின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுப்பது தான் மாநில அரசின் முதன்மைக் கொள்கையாக இருக்க வேண்டும் என்றும், ஆனால், தமிழக அரசின் நடவடிக்கைகள் இதற்கு நேர்மாறாக இருப்பதுடன், மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக உள்ளது என்றும் ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கிரனைட் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதையும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணொளி:தூத்துக்குடி  ஆட்சியர் ஆஷிஷ்குமார், இடம் மாற்றப்பட்டதற்கு, ராமதாஸ் கண்டனம்

No comments:

Post a Comment